ரம்ஜான் அன்று 3 பேரால் குத்திக் கொலை செய்யப்பட்ட டெல்லி சல்மான் கான்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜோதி நகரில் பொதுமக்கள் முன்னிலையில் 22 வயது வாலிபரை 3 பேர் சேர்ந்து குத்திக் கொலை செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள ஜாகிர் நகரில் தனது 5 சகோதர, சகோதரிகள், பெற்றோருடன் வசித்து வந்தவர் சல்மான் கான்(22 வயது). அவருடைய தந்தைய நையுல்லா கான் பொறியியல் கல்லூரி ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். சல்மானும், அவரது அண்ணன் ஆமீரும்(24) தந்தைக்கு உதவியாக கேன்டீனில் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சல்மான் டெல்லி ஜோதி நகரில் உள்ள தனது உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். அன்று மாலை அவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்றபோது அவர் தனது பைக் அருகில் நின்றுள்ளார். அப்போது ஒரு பைக்கில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்கள் பைக்கை நிறுத்துகையில் சல்மானின் கால் மீது வாகனத்தை வைத்து இடித்துள்ளனர். மேலும் அவரின் பைக் மீது அந்த 3 பேர் தங்களின் பைக்கை இடித்துள்ளனர்.
இதை தட்டிக்கேட்ட சல்மானுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சல்மானை இரண்டு முறை குத்தினார். பிறகு அந்த 3 பேரும் பைக்கில் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த சல்மான் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட்டில் நடந்த இந்த கொலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications