For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம்: ஆதாரம் இருந்தால் சார்ஜ்சீட்டில் பெயர் இல்லாதவரையும் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்

By Mathi
Google Oneindia Tamil News

2G: Those not charged can be tried if there's evidence'
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகையில் பெயர் இல்லாதவரையும் கூட ஆதாரம் இருந்தால் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்பட ஏராளமானோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ தலைமையில் கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, போதுமான ஆதாரம் இருந்தால், குற்றம்சாட்டப்படாத மற்றும் குற்றப் பத்திரிகையில் இடம் பெறாத நபரைக் கூட நீதிமன்றம் விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

English summary
Hearing a plea in the 2G scam, the Supreme Court has said that a person can be tried by a court even if he or she is not made an accused or if their name is not in a chargesheet. The court has said that, however, this can be done only if there is evidence against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X