ஆந்திராவில் 45 குரங்குகளை கொன்று புதைத்த சம்பவம்.. உடலில் விஷம் இல்லை.. கொலை நடந்தது எப்படி?
அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 45 குரங்குகளை யாரோ அடித்து கடுமையாக துன்புறுத்தி மொத்தமாக புதைத்ததாக ஆய்வறிக்கைகள் வந்துள்ளன.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கவிதி தாலுக்காவுக்கு உள்பட்ட சிலாகம் கிராமத்தில் குரங்குகள் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி புதைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு புகார் சென்றது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
அந்த குரங்குகள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து கால்நைடைத் துறை மருத்துவர்கள் மூலம் புதைக்கப்பட்டிருந்த குரங்குகளின் உடலை அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பகீர் தகவல்
இந்த பிரேத பரிசோதனையில் பகீர் தகவல் கிடைத்தது. அதாவது அவை கூர்மையான ஆயுதங்களால் பலமாக தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஸ்ரீசா கூறுகையில் குரங்குகள் உடலில் இருந்சு எடுக்கப்பட்ட மாதிரிகள் விஜயவாடாவில் உள்ள கால்நடை உயிரி ஆய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது.

உடலில் விஷம்
அதில் குரங்குகளின் உடலில் விஷம் இல்லை என முடிவுகள் வந்துள்ளன. குரங்குகளின் உள் உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் கைகள்,தலை, பின் பகுதிகளில் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளன. இவற்றை வலை விரித்து பிடித்து பின்னர் கொடுமையாக தாக்கி கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது என்றார். இந்த குரங்குகள் அக்டோபர் 25 ஆம் தேதி கொல்லப்பட்டிருக்கின்றன. 45 குரங்குகளில் குட்டிகள், பெண் குரங்குகளும் அடங்கும்.

38 குரங்குகள்
இது போல் கடந்த ஆண்டு பெங்களூருவில் ஹாசன் மாவட்டத்தில் 38 குரங்குகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. யாரோ குரங்குகளின் தொல்லை தாள முடியாமல் இப்படி செய்துள்ளதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. குரங்குகளை தாக்குவோரையும் துன்புறுத்துவோரையும் கொலை செய்வோரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

18 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை
கடந்த அக்டோபர் மாதம் ஆந்திராவில் 18 தெரு நாய்களுக்கு விஷம் வைத்து யாரோ கொன்றிருந்தனர். எலுரு மாவட்டத்தில் நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த குரங்குகளுக்கு செப்ரோல் கிராமத் தலைவரும் செயலாளரும் விஷ ஊசி போட்டு கொன்றதாக மக்கள் கூறினார்கள். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.












Click it and Unblock the Notifications