ரூ. 5000 டெபாசிட் செய்யும் போது விசாரணை கிடையாது… ரிசர்வ் வங்கி அறிவிப்பு
5000 ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது விசாரணை நடத்தப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
டெல்லி: 5000 மற்றும் அதற்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது விசாரணை நடத்தப்படும் என்று கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி இன்று திரும்பப் பெற்றுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதி மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. மக்களிடம் உள்ள பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கு டிசம்பர் மாதம் 30ம் தேதி வரை கெடுவிதித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 5000 ரூபாய் அல்லது அதற்கும் மேலான தொகையை டிசம்பர் 30ம் தேதி வரை ஒரே ஒருமுறை மட்டுமே செலுத்த முடியும் என்றும், அப்படி செலுத்தும் போது, குறைந்தபட்சம் இரண்டு வங்கி அதிகாரிகளின் முன்னிலையில், தொகை தாமதமாக செலுத்தப்படுவதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யும் பொதுமக்களிடம் எந்தவிதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருந்தார். இதனால் மக்களிடையேயும், வங்கி அதிகாரிகளிடையேயும் ஒரு குழப்பமான சூழல் உருவானது.
இந்நிலையில் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக திடீரென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், 5000 ரூபாய் செலுத்தும் போது வங்கி அதிகாரிகள் பொதுமக்கள் கேள்வி கேட்டு விசாரணை நடத்தமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications