சுற்றுலா வந்த இடத்தில் குதிரையிலிருந்து விழுந்து 7 வயது இங்கிலாந்து சிறுமி பலி!
மும்பை: மகாராஷ்டிராவில் சுற்றுலா வந்திருந்த 7 வயது இங்கிலாந்து சிறுமி குதிரைச் சவாரி செய்த போது, தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டம், மாதரென் மலை வாசஸ்தலத்திற்கு இங்கிலாந்து குடும்பம் ஒன்று சுற்றுலா வந்திருந்தனர். அக்குடும்பத்தில் இருந்த 7 வயது சிறுமி ஒருவர் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டுள்ளார். அதன்படி சிறுமி மட்டும் தனியாக குதிரைச் சவாரி செய்துள்ளார்.
அப்போது முரண்டு பிடித்த குதிரை தறிகெட்டு ஓடியது. இதில், சிறுமி குதிரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். சுமார் 300 அடி தூரம் வரை சிறுமியின் உடலை குதிரை இழுத்து சென்றது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராய்காட் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மும்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குதிரை உரிமையாளர் மீது சிறுமியின் தந்தை புகார் ஏதும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியுடன் அவரது தந்தை கோவின் மார்க் மெவஹ் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர். கோவின், துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications