ஆம்புலன்ஸ் கொடுக்காத எய்ம்ஸ்... இறந்த மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை... பாட்னாவில் கொடூரம்
பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டு இறந்த 9 வயது சிறுமிக்கு இறந்த பின்பும் கூட ஆம்புலன்ஸ் கொடுக்க மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. இறந்த மகளை தோளில் வைத்து சுமந்து
பாட்னா: பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு மருத்துவம் அளிக்காமல் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி வரிசையில் இருந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இதையடுத்து இறந்த மகளை வீடு வரை தோளிலேயே சுமந்து சென்றுள்ளார் அந்தப் பெண்ணின் தந்தை.
சிகிச்சைக்கு வந்த சிறுமி பலி ஆன சம்பவமும், அதையடுத்து ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு அவர் மகளை சுமந்து சென்ற வீடியோ வெளியானதும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நலம் இல்லாத ரவுஷன் குமாரி
ரவுஷன் குமாரி பீகாரின் 'லகிஷராய்' என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக கொடூரமான காய்ச்சல் நிலவி வந்து இருக்கிறது. நாளுக்கு நாள் உடலில் வெப்பவும், காய்ச்சலும் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இவருக்கு உள்ளூரில் கொடுக்கப்பட்ட மருத்துவம் எதுவும் பலன் அளிக்காததால் பாட்னாவில் இருக்கும் உயர்தர மருத்துவமனையான பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

லைனில் நிற்க வைக்கப்பட்டார்
ஆனால் அங்கு அவருக்கு உடனடியாக மருத்துவம் பார்க்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை ராம்பாலாக் கூறியதாவது ''மருத்துவமனைக்கு இவளை மிகவும் மோசமான நிலையில்தான் கொண்டு வந்தோம். ஆனால் இங்கு இவர்கள் உடனியாக சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளாமல் விண்ணப்ப படிவங்களைக் கொடுத்து நிரம்ப சொல்லிவிட்டனர். அந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதை வரிசையில் நின்று கொடுப்பதற்குள் அதிக நேரம் ஆகிவிட்டது'' என்றார். சரியாக ராம்பாலாக் விண்ணப்ப படிவத்தை நிரம்பி வெளியே வரும் நொடியில் அவரது மகள் ரவுஷன் குமாரி மரணம் அடைந்து இருக்கிறார்.

மருத்துவமனையால் ஆம்புலன்ஸ் மறுப்பு
இந்த நிலையில் அந்தப் பெண்ணின் இருந்து உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ராம்பாலாக் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் அவர் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து இவர் ஆம்புலன்ஸ் இல்லாமல் , இறந்த மக்களின் உடலை தோளிலேயே சுமந்து வீடு வரை சென்றிருக்கிறார்.

இணையத்தில் வெளியான வீடியோ
இந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர் அவரது மகளை சுமந்து செல்லும் சோகமான காட்சிகள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாகி உள்ளது. காலையில் அந்தப் பெண்ணின் மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகமே மதியத்திற்குள் இப்படி ஒரு செயலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications