வெளியே சொன்னால் நரகத்துக்கு போவாய்.. நோயுற்ற சிறுமியை 3 மாதம் பலாத்காரம் செய்த பாதிரியார்!
வெளியே சொன்னால் நரகத்துக்கு போவாய் என்று மிரட்டி நோயுற்ற சிறுமியை பாதிரியார் ஒருவர் 3 மாதம் பலாத்காரம் செய்துள்ளார்.
Recommended Video

காக்கிநாடா: உடல்நிலை பாதித்த சிறுமியை 3 மாதம் பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார், பலாத்காரம் பற்றி வெளியே சொன்னால் நீ நரகத்துக்கு போவாய் என்று மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவில் உள்ள ராமாராவ் பேட்டையைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர் கொர்ல பேட்டையில் உள்ள ஹவுஸ் ஆஃப் சால்வ் என்ற தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த உடல் நிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் உடல்நிலை குணமாக சிறப்பு பிரார்த்தனை நடத்துவதாக பாதிரியார் கூறியுள்ளார். மேலும், சிறுமியின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று சிறப்பு பிரார்த்தனை நடத்துவதாகக் கூறி அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நரகம்
மேலும், பலாத்கார விஷயத்தை யாரிடமாவது கூறினால், நீ நரகத்துக்கு போவாய் என்று பாதிரியார் சிறுமியை மிரட்டியுள்ளார். இப்படி 3 மாத காலமாக உடல்நிலை சரியில்லாத சிறுமியை அந்த பாதிரியார் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.

பெற்றோர் புகார்
ஒரு கட்டத்தில் பாதிரியாரின் பாலியல் பலாத்காரத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள், காக்கிநாடா போலீஸில் அந்த பாதிரியார் மீது புகார் அளித்துள்ளனர்.

போக்சோ சட்டம்
புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீஸார் பாதிரியார் ஜோஷ்வா மீது சிறுமியை பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பாவமன்னிப்பு
கேரளாவில் பாதிரியார்கள் பாவமன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உடல் நிலை சரியில்லாத சிறுமியை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications