ரயில் மோதி உருக்குலைந்த யானை.. நடக்க முடியாமல் தவழ்ந்த காட்சி.. மனதை உருக்கும் வீடியோ
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் இன்டர்சிட்டி ரயில் மோதி படுகாயமடைந்த யானை ஒன்று நடக்க முடியாமல் தவழ்ந்து சென்ற காட்சி காண்போர் மனதை உருக வைத்தது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் நக்ராகடா வழித்தடத்தில் நேற்று காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது காலை 8 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தது. அச்சமயம் யானை மீது ரயில் வேகமாக மோதியது. இதனால் அந்த யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது.
இதில் யானையின் உடல் முழுவதும் படுகாயமடைந்தது. இதனால் ரயிலின் எஞ்சின் பகுதியும் சேதமடைந்தது. உடம்பில் ஏராளமான சிராய்ப்புகளுடன் ரத்தம் சொட்ட சொட்ட அந்த யானை தவழ்ந்து சென்றது.

பின்னர் ஒரு மரத்தின் அருகே எழுந்து நின்றது. இந்த காட்சியை ரயில் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். மிகவும் அழகாக கம்பீரமாக நடந்து வரும் யானை இப்படி தவழ்ந்ததை கண்டு பயணிகள் கண்கலங்கினர்.
விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாடும் பகுதியாகும். காயமடைந்த பெண் யானையை வனத்துறை அதிகாரிகள் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றைய தினம் முழுவதும் அவ்வழியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
2002-ஆம் ஆண்டு அலிபுக்தார் சந்திப்பை அகல ரயில் பாதையாக மாற்றியதை அடுத்து வேகமாக இயக்கப்பட்ட ரயில்களால் 65 யானைகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications