Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோச்சா இல்ல, இது ரியல் புயல்.. பஞ்சாப் ஜலந்தரின் இடைத்தேர்தல் ரிசல்ட்.. பாஜகவின் ஓட்டுக்களை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜலந்தர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 24 ஆண்டுக்கால காங்கிரஸின் பிடியை ஆம் ஆத்மி கட்சி உடைத்தெறிந்து வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரையானது இந்த ஆண்டு ஜனவரியில் பஞ்சாபை எட்டியது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இது தவிர யாத்திரையை சிறப்பிக்கும் விதமாக சினிமா நட்சத்திரங்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்பி, எம்எல்ஏக்களும் யாத்திரையில் பங்கேற்றிருந்தனர்.

Aam Aadmi Party won the Jalandhar Lok Sabha by-election in Punjab

75 மாவட்டங்கள், 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் வழியாக 163 நாட்கள் இந்த யாத்திரை பயணித்தது. ஒவ்வொரு நாளின் விடியற்காலையில் ராகுல் காந்தியுடன் மேற்குறிப்பிட்டவர்கள் யாத்திரையில் பங்கேற்றிருந்தனர். இப்படியாக பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதியன்று யாத்திரை அதிகாலையில் தொடங்கியது. ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியும் பங்கேற்றிருந்தார்.

ஆனால் இவர் பங்கேற்ற சில நிமிடங்களில் சுருண்டு விழுந்தார் இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அழைத்துச் சென்றனர். இவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து யாத்திரை சில நாட்கள் வரை தள்ளி வைக்கப்பட்டது. சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவையடுத்து கடந்த 10ம் தேதி இந்த ஜலந்தர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் சந்தோக் சிங் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுர் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். அதேபோல அவருக்கு எதிராக காங்கிரஸிலிருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு தாவிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுஷில் குமார் ரிங்கு களமிறங்கினார். இவர் மட்டுமல்லாது பாஜக மற்றும் சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் இந்த தொகுதியில் நான்கு முனை போட்டி உருவானது. ஏற்கெனவே காங்கிரஸ் எம்பி உயிரிழந்துள்ள நிலையில் அனுதாப ஓட்டுக்கள் அவருடைய மனைவிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதும் நிகழவில்லை.

தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மியின் வேட்பாளர் ரிங்கு இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஜலந்தர் தொகுதியில் கடந்த 24 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெற்றதில்லை. எனவே முதல் முறையாக இதனை உடைத்து ஆம் ஆத்மி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதனையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங் கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆம் ஆத்மியின் புதிய எம்பிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "மக்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற உழைத்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நான் நன்றியை கூறுகிறேன். அதேபோல வெற்றி பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் ரிங்குவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முடிவுகள் எங்களின் பொறுமையையும், நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. எனவே நாங்கள் இனி கடினமாக உழைப்போம்" என்று கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 3,02,097 வாக்குகளையும், காங்கிரஸ் 2,43,450 வாக்குகளையும் பெற்றுள்ளது. இந்த நான்கு முனை போட்டியில் அகாலிதளம் 1,58,354 வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 1,34,706 வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+