மாலை 6 மணிக்குள் சரண்டராக வேண்டும்.. சோம்நாத் பாரதிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் பாரதி மீதான கொலை முயற்சி வழக்கில் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் இன்று மாலை 6 மணிக்குள் அவர் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தனது மனஐவி லிபிகா மித்ராவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும், நாயை விட்டு கடிக்க வைத்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் புகாருக்குள்ளாகியுள்ளார் பாரதி. இதுதொடர்பாக அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை டெல்லி போலீஸார் போட்டுள்ளனர். இதையடுத்து பாரதி தலைமறைவாக உள்ளார்.

இரண்டு முறை கீழ்க் கோர்டடுகளில் அவர் முன்ஜாமீன் கோரினார். ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் அவர் சரணடைய வேண்டும். நீங்கள் பொறுப்பான குடிமகன் என்றால் தப்பி ஓடக் கூடாது. சரணடைய வேண்டும்' என சோம்நாத் பாரதியை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
மேலும், ‘முதலில் கோர்ட்டுக்கு சரணடையுங்கள், பின்னர் கோர்ட்டுக்கு வாருங்கள்' என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் சோம்நாத் பாரதி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கிரிமினல் போல அடிக்கடி இடம்மாறி தலைமறைவாக இருக்கிறார் சோம்நாத் பாரதி என டெல்லி போலீஸார் கூறுகிறார்கள். பாரதியின் செயலுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கண்டன்ம் தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள பாரதி ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாறி மாறிப் பதுங்கியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications