உத்தரகாண்டில் கிளீன் ஸ்வீப் செய்யும் பாஜக.. காங்கிரஸ்க்கு ஜீரோ.. ஏபிபி சி வோட்டர் சர்வே

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: உத்தரகாண்ட் லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏபிபி சி வோட்டர் வெளியிட்டுள்ளது. இதன்படி, உத்தரகாண்டில் பாஜகவின் மவுசு குறையாமலே உள்ளது. அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லோக்ச்பா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் முறையாக ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றன.

Abp cvoter opinion poll 2024 BJP Clean Sweep in Uttarakhand lok sabha election 2024

நாடு முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் பரபரபக்க ஆரம்பித்துவிட்டன. தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 5 லோக்சபா தொகுதிகளிலும் பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. நைனிடால், உதம்சிங் நகர், அல்மோரா, தெஹ்ரி கர்க்ஹாவல், ஹரித்வார் மற்றும் கர்வால் ஆகிய 5 இடங்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட கிடைக்காது என சர்வே முடிவுகள் கூறியுள்ளன.

மொத்த தொகுதிகள்: 05
பாஜக: 05
காங்கிரஸ்: 00

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+