கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் மீது வழக்கு பதிவு
அமிர்தசரஸ்: ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒரு நிகழ்ச்சியின் போது கிறிஸ்தவ மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் மீது பஞ்சாப் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரவீணா டாண்டன், இயக்குநர் பராகான், நகைச்சுவை நடிகை பாரதி சிங், ஆகியோர் பங்கேறற்னர். அப்போது அவர்கள் கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விமர்சனங்களை மேற்கொண்டதாக புகார் எழுந்தது. அந்த டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் வீடியோ ஆதாரத்துடன் அஜ்னாலா நகர கிறிஸ்துவ முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அமிர்தரசஸ் அருகே உள்ள அஜ்னால என் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், தயாரிப்பாளர்-இயக்குனர் ஃபரா கான் மற்றும் நகைச்சுவை நடிகை பாரதி சிங் ஆகியோர் மீது மத நம்பிக்கையை அவமதித்ததாக ஐபிசி பிரிவு 295-ஏவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த தகவலை காவல்துறை எஸ்எஸ்பி விக்ரம் ஜித் துக்கல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications