முரளிதர் ராவ், பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா!
டெல்லி: அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா , பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் , முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்
ஜெயலலிதா என்னை அடித்தார் என மாநிலங்களவையிலேயே பெரும் குண்டை தூக்கி அதிர வைத்தவர் அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் எம்பியாகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.

இவர் அண்மைக் காலமாக பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். தமிழகத்தில் மோடியின் ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்' என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் சசிகலா புஷ்பா இணைந்தார். அப்போது சசிசலா புஷ்பா, பாஜக அரசு தமிழத்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி நாயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்.அதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பாவும் இப்போது பாஜகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரததில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications