Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. காங்கிரஸ் இன்றி புதுகூட்டணி.. மம்தா-அகிலேஷ் யாதவ் சந்திப்பில் பரபர முடிவு.. மகிழ்ச்சியில் பாஜக!

2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணியை அமைக்க மம்தா பானர்ஜி முடிவு செய்து காய்களை நகர்த்தி வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இல்லாத 3வது அணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலஷ் யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சந்திப்பின்போது நடந்தது என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்தியில் தொடர்ந்து பாஜக 2வது முறையாக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பாஜக பல மாநிலங்களில் பலமாக உள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி பலமிலந்து மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்து வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தற்போதே அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வியூகம் வகுத்து வருகின்றன.

புதிய கூட்டணி அமைக்க முடிவு

புதிய கூட்டணி அமைக்க முடிவு

பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் அதனை தான் தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இல்லாத 3வது அணியால் முடியாது. மாறாக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்தால் பாஜகவை வீழ்த்தலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இல்லாத புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

மம்தா பானர்ஜி மீண்டும் ஆர்வம்

மம்தா பானர்ஜி மீண்டும் ஆர்வம்

இதில் மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் உள்ளிட்டவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த விஷயத்தில் கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வந்த மம்தா பானர்ஜி தற்போது மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இதனால் 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைவது என்பது சந்தேகத்துக்குரிய ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் அந்த சந்தேகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மம்தாவை சந்தித்த அகிலேஷ்

மம்தாவை சந்தித்த அகிலேஷ்

அதாவது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கொல்கத்தாவில் நடந்தது. மம்தா பானர்ஜியை சந்திக்க அகிலேஷ் யாதவ் அங்கு சென்றார். இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். மேலும் இருமாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து பேசினர்.

புதிய கூட்டணி அமைக்க முடிவு

புதிய கூட்டணி அமைக்க முடிவு

மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி இருதலைவர்களும் விவாதித்துள்ளனர். அதன்படி பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க இருவரும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து விலகியிருக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் புதிய கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை கொண்டு வரலாம் எனவும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

உறுதி செய்த அகிலேஷ் யாதவ்

உறுதி செய்த அகிலேஷ் யாதவ்

இதனை அகிலேஷ் யாதவும் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மேற்கு வங்காளத்தில் நாங்கள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக உள்ளோம். தற்போதைய சூழலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளிடம் இருந்து சமமான அளவில் விலகி இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது'' என்றார். இதன்மூலம் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்குவது தான் மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவின் முடிவாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இணையும் நவீன் பட்நாயக்

இணையும் நவீன் பட்நாயக்

இந்த சந்திப்பை தொடர்ந்து மம்தா பானர்ஜி அடுத்த மாதம் பிஜூ ஜனதாதளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார். பாஜகவை போன்றே காங்கிரஸை எதிர்க்க இந்த மூன்று முக்கிய தலைவர்களும் முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன் பட்நாயக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க விருப்பம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளின் தலைவராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயன்று வரும் சூழலில், இந்த மூன்று தலைவர்களின் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு மகிழ்ச்சி

பாஜகவுக்கு மகிழ்ச்சி

அதோடு பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் நடவடிக்கைக்கு சந்திரசேகரராவ், அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமின்றி மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக் உள்ளிட்டோரும் தடையாக இருக்க வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகள் பல அணிகளாக பிரியும் பட்சத்தில் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக அமையலாம். எளிதாக பாஜக 2024 நாடாளுமன்றத்தில் ஜெயிக்க வாய்ப்புள்ளது எனவும், இதனால் பாஜக மகிழ்ச்சிடையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+