டிவி, ரேடியோவில் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: அரசு தொலைக்காட்சி மற்றும் அகில இந்தியா ரேடியோவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளி்த்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.

வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 30ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற மே 2ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் ஆகும். மே 16ம் தேதி (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். மே 19ம் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அதே போல புதுச்சேரியிலிலுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டபேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் அரசு தொலைக்காட்சி, அகில இந்திய வானொலியில் தேசிய கட்சிகளும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும் தலா 45 நிமிடமும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை தொலைக்காட்சி நிலையத்திலும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திலும் அரசியல் கட்சித்தலைவர்கள் செய்யும் பிரசாரத்தை மாநிலம் முழுவதும் உள்ள பிற நிலையங்களும் ஒலிபரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications