அதிர்ந்த விவசாயிகள்.. போராடினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை.. ஷாக் கொடுத்த ஹரியானா அரசு!
டெல்லி: போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகும் செய்திகள் நாட்டையே அதிர வைத்துள்ளன.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய பாஜக அரசைக் கண்டித்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள், ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் அணிவகுத்துள்ளனர். விவசாயிகளை டெல்லி நோக்கி முன்னேற விடாமல் ஹரியானா, பஞ்சாப் மாநில எல்லைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

கான்க்ரீட் தடுப்புகள், வாகனங்கள் முன்னேற இயலாத வண்ணம் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட தடுப்புகள் என விவசாயிகளை தடுப்பதற்காக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காசிபூர் எல்லையில் 2 பாதைகள் மூடப்பட்டுள்ளன. போலீசாரின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் குவிந்துள்ள பகுதிகளில் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
விவசாயிகள் - போலீசார் மோதல்: போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை கலைக்க அரியானா போலீசார் முயன்றனர். போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற விவசாயிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். கண்ணீர் புகை குண்டுகள் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
ஹரியானாவின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லைப் பகுதியில் பல அடுக்கு தடுப்புகளை நோக்கி நகரத் தொடங்கிய விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகளால் போலீசார் சுட்டதில் விவசாயி ஒருவர் பலியானதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ரப்பர் குண்டு தாக்கியதில் படுகாயமடைந்த இளம் விவசாயியான சுப்கரன் சிங் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாகவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். ஆனால் ஹரியானா காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்தது. விவசாயிகள் தங்களை தடிகளால் தாக்கியதாகவும், மரக்கட்டைகளை எரித்து, மிளகாய்ப் பொடியைக் கொட்டி எரிச்சலான புகையைப் பரப்பி வருவதாகவும் ஹரியானா போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
கறுப்பு நாள்: பேரணியாகச் செல்வதை விவசாயிகள் இரண்டு நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி மரணம் அடைந்ததற்காக பிப்ரவரி 23ஆம் தேதி கருப்பு தினம் அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வரும் 26ஆம் தேதி நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவார்கள் என்றும் விவசாடிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பீர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார். ஹரியானா போலீசார் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், டிராக்டர்களை அடித்து நொறுக்கியுள்ளதாகவும், ஹரியானா முதல்வர், உள்துறை அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு சட்டம்: இந்நிலையில், விவசாயிகள் உள்ளிட்ட நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஹரியானா காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்திலும் அம்பாலா போலீசார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
किसान संगठनो के मुख्य पदाधिकारियों व आन्दोलनकारियो के विरूद रासुका राष्ट्रीय सुरक्षा अधिनियम 1980 /एन0एस0ए0 के तहत कार्यवाही शुरू ।
— Ambala Police (@AmbalaPolice) February 22, 2024
अम्बाला पुलिस@police_haryana @AdgpAmbalaRange @DGPHaryana pic.twitter.com/XUVp072qZG
அதில், காவல்துறையினர் மீது கற்களை வீசியும், குழப்பத்தை உருவாக்குவதன் மூலமும் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க தினசரி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில், குண்டர்களால் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. போராட்டக்காரர்களால் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
ஹரியானா அரசு அதிர்ச்சி நடவடிக்கை: அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தால், அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்து இந்த இழப்பு ஈடு செய்யப்படும். எந்த ஒரு சாமானியருக்கும் சொத்து இழப்பு ஏற்பட்டிருந்தால், அவர் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கலாம்" என்று அம்பாலா போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) 1980ன் கீழ், விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாலா காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஹரியானா காவல்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications