குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் ஒருமனதாக தேர்வு!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பதால் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான குஜராத் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆனந்திபென் படேல் முன்மொழியப்பட்டதை. இதை அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் வழிமொழிந்தனர்.
இதனைத் தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 73 வயதாகும் ஆனந்திபென் படேல் பள்ளிக்கூட ஆசிரியையாக வாழ்க்கையை தொடங்கி இன்று முதல்வராக தேர்வாகியிருக்கிறார்.
குஜராத் மாநிலத்தின் முதலாவது பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஆனந்திபென் படேல். அவர் நாளை மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் கமலா பெனிவால் பதவியேற்பு செய்து வைக்கிறார்.
ஆனந்த கண்ணீர்..
ஆனந்திபென் படேல் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஆனந்திபென் படேல் இடைவிடாமல் ஆனந்த கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications