ராஜ்நாத்சிங்குடன் அன்புமணி சந்திப்பு!

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான அணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15-ந் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சி அறிவித்தது. இதன் மூலம் வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைமையில் 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ஈடுபட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்த கடந்த வாரம் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணிக்கு வைகோ சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பாஜக மற்றும் பாமக தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காவிட்டாலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மதிமுக, பாமகவைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சியின் இளைஞரணிச் செயலர் எல்.கே. சுதீஷ் ஆகியோரிடமும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். தங்கள் அணியில் தலித் கட்சி ஒன்றை இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ள பாஜக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடமும் பேசியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications