நான் மம்தாவை மதிக்கிறேன், ஆனால் அவரது கட்சியை ஆதரிக்கவில்லை: ஹசாரே விளக்கம்
டெல்லி: நான் மம்தாவைப் பெரிதும் மதிக்கிறேன் அதற்காக அவரது கட்சியை ஆதரிக்கிறேன் என அர்த்தமில்லை என விளக்கமளித்துள்ளார் அன்னா ஹசாரே.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி, ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியுடன் ஊழலை எதிர்த்து போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி அப்பொதுக் கூட்டத்தில் ஹசாரே கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மம்தா தனது உரையில், இது ஹசாரேவின் பொதுக்கூட்டம், நான் நினைத்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலேறி என்னைத் தேடி வந்திருப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, 'மம்தாவை நான் பெரிதும் மதிக்கிறேன். நாட்டில் உள்ள முதல்வர்களில் அவர்தான் சிறந்தவர். ஆனால், அதற்காக நான் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறேன் என அர்த்தமில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், லோக்சபா தேர்தலில் நேர்மையானவர்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தி இம்மாதம் 30ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications