எல்லையை நோக்கி வரும் பாக். படைகள்: போருக்கு தயாராக இந்திய ராணுவத்திற்கு ஆர்டர்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.

இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் தனது படைகளை சியால்கோட் எல்லைப்பகுதியை நோக்கி நகர்த்தி வருகிறது.
இதையடுத்து எந்நேரமும் விழிப்புணர்வோடு இருக்குமாறும், போருக்கு தயாராகுமாறும் இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீரர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள வடக்கு பிராந்திய படையை சேர்ந்தவர்கள்.
ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் உதம்பூருக்கு சென்றார். தாக்குதல் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்த வீரர்களை அவர் பாராட்டினார். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்பட இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு நிலவரத்தை தல்பீர் சிங் ஆய்வு செய்தார். அங்கு உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் படைகள் எல்லை நோக்கி வருவதால் மேற்கு பிராந்திய படையின் பதன்கோட், கத்துவா, சம்பா, ஜம்மு, அக்னூர் பிரிவு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அந்த படைகளின் முக்கிய அதிகாரிகள் அனைவரின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications