அவசரம் என்றால் ராணுவம் அடித்து தள்ளலாம்.. பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி பச்சைக்கொடி
இந்திய- பாக். எல்லையில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, இந்திய ராணுவம் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லிகூறியுள்ளார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ராணுவம் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதனால் எல்லையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும் உத்தி என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அருண் ஜெட்லி கூறுகையில், "போர் பதற்றம் நிலவும் இடங்களில், பிரச்னைகளை ராணுவம் எவ்வாறு கையாளுமோ, அதே போல் ஜம்மு காஷ்மீரில் ராணுவம் நிலைமையை கையாள வேண்டும். அங்கு எடுக்கப்படும் முடிவுகளை ராணுவ அதிகாரிகள் சுதந்திரமாக எடுக்கலாம்.

இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ராணுவம் ஆலோசனை கேட்க வேண்டிய தேவையில்லை." என்று தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய -பாக். எல்லையோரம் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அருண் ஜெட்லி இவ்வாறு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications