உலகம் இருக்கும்வரை பலாத்காரம் நடக்கத்தான் செய்யும்- மம்தா கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
கொல்கத்தா: உலகம் உள்ளவரை பாலியல் பலாத்காரங்களும் இருக்கத்தான் செய்யும் என்று திரினமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ தீபக் ஹால்தார் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பலாத்காரங்கள் அதிகம் நடப்பதாக குற்றம்சாட்டி, குடிமை அமைப்புகள் சார்பில் கொல்கத்தாவை ஒட்டிய டைமண்ட் ஹார்பர் பகுதியில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு போட்டியாக ஆளும் திரினமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதே பகுதியில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.எல்.ஏ தீபக் ஹால்தார் கலந்துகொண்டு பேசுகையில் "மாநில வளர்ச்சிக்காக யாராவது போராட்டம் நடத்துவதற்கு யாருக்கும் தடை கிடையாது. ஆனால், பலாத்காரம் தொடர்பாக போராட்டம் நடத்தினால், இத்தொகுதியைவிட்டு உயிரோடு திரும்பி போக முடியாது.
பலாத்காரம் என்பது முன்பும் நடந்தது, இப்போதும் நடக்கிறது, உலகம் இருக்கும்வரை நடக்கத்தான் செய்யும்" என்று பேசினார். ஏற்கனவே திரினமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.தபஸ் பால் பலாத்காரம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தீபக்கின் பேச்சும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீட்டு பெண்களை திரினமுல் காங்கிரஸ் கட்சியினர் பலாத்காரம் செய்வார்கள் என்று தபஸ்பால் எச்சரித்தது தேசிய அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தீபக் ஹல்தாரின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க சபாநாயகருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபாரிசு செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications