மோடியை குறிவைத்து தாக்குதல்.. அசார் அமைச்சர் இதில் பலியாவார்.. மிரட்டல் நபரை கைது செய்த போலீஸ்
குவகாத்தி: பிரதமர் மோடி மீது வரும் 2021ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்று கணித்தவரை அஸ்ஸாம் போலீசார் கைது செய்தனர்.
அவரது கணிப்பின்படி 2021ம் ஆணடு குவகாத்தியில் நடக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்றும் அதில் அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கொல்லப்படுவார் எனறும் கூறியுள்ளார்.
அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தின் போர்பக் பகுதியைச் சேர்ந்தவவர் லன்டு கிஷோர் சர்மா வயது 35. இவர் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்று கூறி கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பலியாவார்
அந்த பதிவில், "பிரதமர் மோடி வரும் 2021ம் ஆணடு தேர்தல் பிரச்சாரத்திற்காக குவகாத்தி வரும் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். பிரதமர் மோடியை குறிவைத்து நடக்கப்போகும் இந்த தாக்குதலில் பிரதமர் மோடிக்கு பதில் அஸ்ஸாம் மாநிலதின் சுகாதாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மா பலியாவார்.

வேலை கொடுத்தால் காப்பாற்றுகிறேன்
அமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மாவின் உயிர் தற்போது என்னுடைய கையில் இருக்கிறது.அவர் எனக்கு நல்பாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வேலை போட்டுக்கொடுத்தால் இறந்து போவதில் இருந்து தப்பிக்க வைக்கிறேன்" என கூறியுள்ளார்.

போலீசார் கைது
இதையடுத்து நல்பரி காவல் நிலையத்தில் சனிக்கிழமை அன்று புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்று போலீசார் லன்டு கிஷோர் சர்மா மீது வழக்கு பதிவு செய்ததுடன் ஞாயிற்றுக்கிமை அவரை தேடி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், எதிர்காலத்தையே மாற்றக்கூடிய ஜோதிடன் என்றும் தனக்கு வேலை மட்டும் கொடுத்தால் போதும் என்றும் கூறியிருக்கிறார்.

போலீஸ் அதிர்ச்சி
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை எச்சரித்ததுடன், இப்படியெல்லாம் போஸ்ட் போடக்கூடாது என கவுன்சிலிங் கொடுத்தனர். சமூக ஊடகங்களை ஆபத்தான, தவறான பழக்கவழக்கங்களுக்காகப் பயன்படுத்தும் நபர்களை அஸ்ஸாம் போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறோம். அதேநேரம் சமூக ஊடகங்களை விவேகமாக பயன்படுத்துவதற்கு இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறோம் என நல்பாரி மாவட்ட போலீஸ் எஸ்பி கவுர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications