நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட உ.பி., பீகார், மே. வங்கத்தில் பலி எண்ணிக்கை 51 ஆனது

Subscribe to Oneindia Tamil

பாட்னா: சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீகார் உள்பட 3 மாநிலங்களில் 51 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நேபாளத்தில் சனிக்கிழமை காலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.

At least 51 killed, mostly in Bihar, as massive earthquake rocks India

டெல்லி, பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பீகாரில் 38 பேர் பலியாகியுள்ளனர், 133 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் உத்தர பிரதேசத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர், 69 பேர் காயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 51 பேர் பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மருந்துகள், மருத்துவர்கள் உள்பட மீட்பு பணிக்கு தேவையான அனைத்தையும் உடனே அனுப்பி வைக்குமாறு பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் தெரிவித்துள்ளார்.

இது தவிர தேசிய பேரிடர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த 460 பேர் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+