கருப்பு பணத்தை தங்க நகையாவா மாத்துனீங்க.. அங்கேயும் வச்சிட்டாங்கல்ல ஆப்பு!
டெல்லி: நவம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் சி.சி.டி.வி வீடியோக்களை நகைக்கடைகள் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய வருமான வரித்துறு உத்தரவிட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு சுமார் 8.30 மணிக்கு அறிவித்தார். இதனை அடுத்து அன்று நள்ளிரவு வரை நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் திடீரென அலைமோதியது.

சென்னை டி.நகரில் அன்று நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு 'ரத்தின கம்பளம்' விரிக்கப்பட்டது. பல நகரங்களிலும் இதே நிலைதான் நீடித்தது.
தங்களிடமிருந்த ரூ.500, ரூ.1000 கருப்பு பண நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்தால் கணக்கு காட்ட வேண்டும் என்பதால் நகைகளாக வாங்கி கருப்பு பண முதலைகள் குவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, நவம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு வரையில் நகைக்கடைகளில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அனைத்து ஜுவல்லரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. நகைகள் வாங்கியவர்களை நோட்டமிட்டு அவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்த ஐடி துறை முடிவு செய்துள்ளது.
நகை வாங்குவோரின் பான் கார்டு எண்ணை பதிவு செய்ய ஏற்கனவே வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. ஒருவேளை பதிவு செய்யாமல் தப்பியோரும், சிசிடிவி மூலம் பிடிபடுவர் என்பது வருமான வரித்துறை கணக்கு.
"கிடைக்கிற கேப்ல எல்லாம், கோல் அடிக்கிறிய சிவாஜி" டயலாக் நினைவுக்கு வருகிறதா?












Click it and Unblock the Notifications