ஸ்பெக்ட்ரம் ஏலம்: மத்திய அரசுக்கு ரூ1.10 லட்சம் கோடி வருவாய்! உச்சநீதிமன்றமும் தடையை நீக்கியது!!
டெல்லி: செல்போன் சேவைகளுக்கான ஸ்பெக்டெரம் ஏலம் முடிவடைந்துள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெற்ற இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலமாக மத்திய அரசுக்கு ரூ1.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஏலம் தொடர்பாக விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றமும் நேற்று நீக்கி உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியது. ஏல முறை பின்பற்றப்பட்டிருந்தால் இழப்பீடு ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்து ஏல முறையினை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தினாலும் முடிவை உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த 4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 19 நாட்களாக நடந்த ஏலம் நேற்று முன் தினம் நிறைடைந்தது பெற்றது.
மொத்தம் 115 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஏலத்தின் முடிவில் மத்திய அரசுக்கு ரூ1.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி எர்டெல், வோடஃபோன் இண்டியா, டாடா டெலிசர்வீசஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன.
உச்சநீதிமன்ற தடை நீக்கம்
இதனிடையே 2ஜி வழக்கில் முன்னர் உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது. இந்தத் தடையையும் உச்ச நீதிமன்றம் நேற்று நீக்கியது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.கே. பாண்ட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்பெக்ட்ரம் ஏலம் மீதான முந்தைய தடை உத்தரவை நீதிபதிகள் நீக்கினர். கடந்த 19 நாட்களாக நடத்தப்பட்ட ஏலத்தை இறுதி செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளித்தனர்.
இதன்மூலம் ஸ்பெக்ட்ரம் ஏலம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ள சட்டபூர்வமாக அனுமதி கிடைத்துள்ளது. இந்த ஏலத் தொகையால் அரசின் நிதிப் பற்றாக்குறை குறையும் எனக்கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications