இதுதான் பாஜக.. அயோத்தியில் அரும்பிய உலகின் முதல் சைவ கேஎப்சி.. ராமர் மண்ணில் சபாஷ்.. பக்தர்கள் குஷி
கான்பூர்: சர்வதேச அளவில் சிக்கன் உணவுக்கு பெயர் போன கேஎப்சி, மீண்டும் உலகளவில் தன்னுடைய கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
நாளுக்கு நாள், அயோத்தியில் பக்தர்களின் வருகை அதிகரித்தபடியே வருகிறது.. தினமும் சுமார் 3 லட்சம் பேர் கோயிலுக்கு வந்து போகிறார்களாம்.. அதனால், அனைவருக்கும் உணவு தேவை எழுந்துள்ளது. இதை மையமாக வைத்தே, நிறைய ஹோட்டல்கள், மெஸ்கள், அயோத்திக்குள் திறக்கப்பட்டுள்ளன..

சந்தேகம்: அந்தவகையில், கேஎஃப்சி (KFC) அயோத்தியில் அமைக்கப்படுமா? என்று சந்தேகம் கிளம்பியது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. காரணம், அயோத்தியிலுள்ள ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கி.மீ தூரத்துக்கு அசைவம் விற்க கூடாதாம்.. இதற்கு 'பஞ்ச் கோஷி மார்க்' முறை என்று சொல்கிறார்கள்.. அசைவம் மட்டுமல்ல, மதுபான கடைகளுக்கும் இதே தடைதான் உள்ளது.
கேஎப்சி உட்பட பிராண்டு உணவகங்கள், அயோத்தியில் மற்ற பகுதிகளில் எங்குவேண்டுமானாலும் இறைச்சியை விற்றுக் கொள்ளலாம். ஆனால், பஞ்ச் கோசி மார்க் பகுதிக்குள் கிளையை திறக்கக்கூடாது. அப்படியே திறந்தாலும், வெறும் சைவம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று விளக்கம் தந்துள்ளது.
கேஎப்சி: அந்தவகையில், கேஎப்சி-ஐ அயோத்திக்குள் அனுமதிக்கப்பட்டாலும், சைவ உணவை மட்டுமே தயார் செய்யும்படி அனுமதி தந்துள்ளது.. அந்தவகையில், உலகின் முதல் சைவ கேஎப்சி அயோத்தியில் உருவாகி உள்ளது.
அயோத்தியில் கோயில் அதிகாரி ஒருவர் இதுகுறித்து சொல்லும்போது, "அயோத்தியிலிருந்து 15 கிமீ தொலைவில் லக்னோ சாலையில் புதிய கேஎப்சி உணவம் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் இந்த கேஎப்சி உணவகம் உள்ளது.. ஏனெனில் நாங்கள் அசைவ உணவுகளை இங்கு அனுமதிக்கவில்லை. சைவ உணவுகளை மட்டுமே விற்க முடிவு செய்தால், கேஎப்சி நிறுவனத்துக்குக் கூட இடம் வழங்க முடிவு செய்தோம்" என்றார்..
ராமர் கோயில்: அதுமட்டுமல்ல, ராமர் கோயிலிலிருந்து 1 கி.மீ தூரத்துக்கு, டோமினோஸ், பீட்சா ஹட் ஓட்டலும் திறக்கப்பட்டுள்ளது.. இந்த பீட்சா கடையை திறந்த கொஞ்ச நாளிலேகயே, ஏகப்பட்ட கஸ்டமர்கள் டோமினோஸ்ஸுக்கும் பீட்சா ஹட்டுக்கும் குவிந்துவிட்டார்களாம். இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், புதிதாக திறக்கப்பட்ட இந்த கடைகளிலும் சைவ வகை உணவு மட்டுமே விற்கப்படுகிறாம்.
அசைவ உணவு: ஏற்கனவே, ஹரித்துவாரிலும் இப்படித்தான், அசைவ உணவு விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.. இப்போது அயோத்தியிலும் அசைவத்துக்கு தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
கேஎப்சி-யை பொறுத்தவரை, அமெரிக்காவின் லூயிஸ்வில்லியை தலைமையகமாக கொண்டு சிக்கன் உணவு வகைகளில் தனக்கென்று ஓரு சாம்ராஜ்யத்தை நடத்திவருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு, அமெரிக்காவின் கேஎப்சி நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அதாவது, விரைவில் சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்த போவதாகவும், அதுவும், முதலில் பிரிட்டனிலேயே அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதற்கு பிறகு படிப்படியாக, சர்வதேச அளவில் கொண்டுவரப்போவதாகவும் கூறியிருந்தது.
ஆச்சரியம்: இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.. காரணம், கேஎப்சி என்றாலே மொறு மொறு கோழித்துண்டுகள்தான் நம்முடைய அனைவரின் கண்முன்பும் வந்து நிற்கும்போது, சைவ கேஎப்சியா? என்று பலரும் வியந்துபோனார்கள்.
இப்படி ஒரு அறிவிப்புக்கு காரணம், பிரிட்டன் அரசு, அந்த நாட்டு மக்கள், அதிகளவு கலோரி உள்ள உணவுகளை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் களமிறங்கியதுதான். இதன் காரணமாகவே, கலோரிகள் அதிகமுள்ள அசைவ உணவுகளை தவிர்க்கும் வகையில், கே.எப்.சி. நிறுவனம், குறைந்த கலோரிகள் கொண்ட சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. அதாவது, 7 ஆண்டுகளில் கலோரி அளவை 20 சதவீத அளவிற்கு குறைக்க திட்டமிட்டிருந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்தன..
பிரபலம்: ஆனால், இப்போது உலகின் முதல் கேஎப்சி, அயோத்தியில் திறக்கப்பட்டுள்ளது, மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும், ஏற்படுத்தி வருகிறது.. அந்தவகையில், சர்வதேச அளவில் சிக்கன் உணவு வகைகளுக்கு பிரபலமான கே.எப்.சி., தன் கவனத்தை அயோத்தியில் குவித்து கொண்டிருக்கிறது..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications