பெங்களூரில் பயங்கரம்.. ஜார்க்கண்ட் பெண் சாப்ட்ர்வேர் என்ஜீனியர் அதிகாலையில் பலாத்காரம்!
பெங்களூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் பெங்களூரில் தான் தங்கியிருந்த இடத்திலேயே அதிகாலையில், பலாத்காரம் செய்யப்பட்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் சிட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அவர் தான் தங்கியிருந்த பிஜி இருப்பிடத்தில் வைத்தே பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது. அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பெண் தங்கியிருந்த அறைக்குள் மர்ம நபர் ஜன்னல் வழியாக ஊடுறுவி வந்துள்ளான். அந்த சமயத்தில், அப்பெண்ணுடன் தங்கியிருந்த இன்னொரு பெண் இரவுப் பணிக்குப் போயுள்ளார். அதைத் தெரிந்து கொண்டே அந்த நபர் வந்துள்ளதாக தெரிகிறது. முதலில் அப்பெண்ணீிடம் பணம் கேட்டு அந்த நபர் மிரட்டினாராம். பின்னர் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications