சிஎஸ்கே, ராஜஸ்தானுக்கு பதிலாக புதிய 2 ஐபிஎல் அணிகள்.. டெண்டர் விட பிசிசிஐ திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐபிஎல் தொடரில் இருந்து இரு அணிகள் விலக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு பதிலாக புதிய அணிகளை டெண்டர் மூலமாக உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் சூதாட்டப் பிரச்சினையில் அணியின் நிர்வாகிகள் சிக்கியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் 2 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், டெண்டர் மூலமாக புதிய இரு அணிகளை களமிறக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டெண்டர் பணிகளை வெளிப்படையாக செய்யவும், ஏலத்தில் எடுக்க பல தரப்பையும் அழைக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அவ்வமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஆறு வார காலத்திற்குள் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications