பாஜகவினரிடம் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள் - மாயாவதி எச்சரிக்கை
லக்னோ: பா.ஜ.க.விடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று தனது கட்சியினரை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எச்சரித்து உள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம், லக்னோவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாயாவதி பேசியதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு அனைத்து விதமாக இழிவான உத்திகளையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடும்.
அதனால், எதிர்க்கட்சிகளிடம் இருந்து குறிப்பாக பா.ஜ.க மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் மத ரீதியிலான தூண்டல்களில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.வால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலனளிப்பதாக இருக்கும். ஆனால், அந்த மாநிலத்துக்கு அது மிகப்பெரிய இழப்புக்கு காரணமாகிவிடும்.
அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், பா.ஜ.க.வால் பீகாரில் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது. மேலும், தேர்தல் முடிவுகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு திருப்தியளிக்கும் விதமாகவும் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications