பீகார் கோவிட் டெஸ்ட்.. '000000000' தான் மொபைல் நம்பராம் - உச்சக்கட்ட மோசடி அம்பலம்
பீகார்: பீகாரில் கோவிட் பரிசோதனை முறைகேட்டின் ஒரு பகுதியாக, சோதனை செய்யப்பட்டவர்களின் தொலைபேசி எண் '0000000000' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளாமல் நெகட்டிவ் என்று சான்றிதழ் கொடுத்ததும், போலியான மொபைல் எண்கள், போலியான பெயர்கள், போலியான முகவரிகள் என பெரும் முறைகேடு நடந்திருப்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்' கண்டறிந்தது.
கடந்த மாதம் பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் உள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் (பி.எச்.சி) 588 பேரிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அனைவருக்குமே கொரோனா இல்லை என்று நெகட்டிவ் வந்தது.

முறைகேடு
சோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு நபரின் பெயர், வயது மற்றும் செல் எண் உள்ளிட்டவை தலைநகர் பாட்னாவுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலிருந்து சோதனை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய தரவுகள் திரட்டப்பட்டன. இப்படி சேகரிக்கப்பட்ட தகவல்கள் உள்ள மொபைல் எண், பெயர், முகவரி என அனைத்துமே போலி என்பதும் இதில் முறைகேடு நடந்திருப்பதையும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சி ரிப்போர்ட்
ஜமுய் மாவட்டத்தின் பர்ஹாட் ஆரம்ப சுகாதார மையத்தில், ஜனவரி 16 ஆம் தேதி கோவிட் பரிசோதிக்கப்பட்டதாகக் காட்டப்பட்ட 48 பேரில் 28 பேரின் மொபைல் எண் "0000000000" என பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.

அதே முறைகேடு
அதேபோல், கடந்த ஜனவரி 25 அன்று பரிசோதிக்கப்பட்ட 83 பேரில் 46 பேருக்கும் இதே "0000000000" எனும் மொபைல் நம்பரே கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி அதே மாவட்டத்தின் மற்றொரு ஆரம்ப சுகாதார மையத்தில் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக காட்டப்பட்ட 150 நபர்களில் 73 பேருக்கு இதே பூஜ்ஜிய மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2,62,000 பேருக்கு
பீகாரில் கடந்த ஆண்டு மத்தியில் கொரோனா தொற்றுநோய் கடுமையாக அதிகரித்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வந்த காரணத்தால், தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக பீகார் மாறியது. பீகாரில் இதுவரை 2,62,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நடவடிக்கை
இந்த சோதனை முறைகேடுகள் குறித்து ஜமுய் மாவட்ட திட்ட மேலாளர் (டிபிஎம்) சுதான்ஷு லாலிடம் கேட்ட போது, "கோவிட் சோதனை தரவு மோசடி குறித்து எங்களுக்கு சில புகார்கள் வந்துள்ளன. பர்ஹாட் பி.எச்.சி மருத்துவ அதிகாரியின் சம்பளத்தையும் நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் விசாரணையில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்." என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications