பீகார் தேர்தல்: பா.ஜ.க. அணிக்கு 42%; ஐ. ஜனதா தளம் அணிக்கு 38% பேர் ஆதரவு- லோக்நிதி சர்வே
பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 42%; ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு 38% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ். கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்துள்ளன.
பாரதிய ஜனதா தலைமையில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா மற்றும் அவாமி மோர்ச்சா ஆகியவை இணைந்துள்ளன. பீகார் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் இரு அணிகளுக்கு இடையே கடும் மோதலே இருக்கும் என்று தெரிவித்து வருகின்றன.

30 தொகுதிகளில்...
இந்நிலையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்காக லோக்நிதி- சி.எஸ்.டி.எஸ். இணைந்து 30 சட்டசபை தொகுதிகளில் 2,079 பேரிடம் செப்டம்பர் மாதம் இறுதியில் கருத்து கணிப்பை நடத்தின.

4% கூடுதல்...
இக்கருத்துக் கணிப்பில் ஐக்கிய ஜனதா தளம் அணியைவிட பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 4% கூடுதல் வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பா.ஜ.க. அணிக்கு 42%; ஐக்கிய ஜனதா தளம் அணிக்கு 38% வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நகர்ப்புறத்தில் பா.ஜ.க.
பீகாரின் நகர்ப்புற தொகுதிகளில் பா.ஜ.க. அணிக்கு 20% கூடுதலாக வாக்குகள் கிடைக்கும்; அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வாக்குகளை நிதிஷ்குமார் அணியே அள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாருக்கு ஆதரவு
முதல்வர் வேட்பாளர்களில் நிதிஷ்குமாருக்கு 27%; பா.ஜ.க.வின் சுஷில்மோடிக்கு 14% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications