For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டாம்.. பாஜக கெஞ்சல்.. நீதிபதிகள் நிராகரிப்பு

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது, அமைச்சரவையை உடனே கூட்ட முடியாது என்று பாஜக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு-முழு விபரங்கள்- வீடியோ

    டெல்லி: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது, அமைச்சரவையை உடனே கூட்ட முடியாது என்று பாஜக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி உள்ளது.

    கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்துகிறது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

    BJP asks some more time for floor test in SC

    இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக, இந்த பாஜக கட்சிதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எடியூரப்பா எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தார் என்று நிரூபிக்க வேண்டும் என்றுள்ளனர்.

    இதற்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நீதிமன்றம் இதை பார்வையிடும் என்று நீதிபதிகள் கூறினார். 15 நாட்கள் எல்லாம் அவகாசம் கொடுக்க முடியாது, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இதற்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

    ஆனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது, அமைச்சரவையை உடனே கூட்ட முடியாது என்று பாஜக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி உள்ளது. அமைச்சர்கள் எல்லோரும் வேறு இடத்தில் இருக்கிறார்கள், உடனடியாக அவையை கூட்ட முடியாது என்றது. ஆனால் நீதிபதிகள் இதை ஏற்கவில்லை.

    நீங்கள் என்ன செய்தாலும் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர். எல்லா எம்எல்ஏக்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்க, கர்நாடக டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    English summary
    BJP asks some more time for floor test in SC, But SC didn't give any time and asked to prove majority by tomorrow itself.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X