ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க பாஜக அரசு கட்டாயப்படுத்தியது.. பரபரப்பு தகவல்!
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதில் 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரும் சிக்கி இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டஸால்ட் நிறுவனம் இதில் மத்திய அரசு மூலம் பல வகைகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மீடியாபார்ட் என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
[10 லட்சம் பேர் வெளியேற்றம்.. ஒடிசாவிற்கு ரெட் அலெர்ட்.. பயமுறுத்தும் டிட்லி புயல்!]
ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும். இல்லையென்றால் ஒப்பந்தம் நடக்காது என்று விதிமுறைகளை மாற்றியதாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்த ஆதாரங்களை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. டஸால்ட் நிறுவனம் ஹின்ஸ்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருந்தது. அதை நிறுத்தி பிரதமர் மோடி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளிக்க சொன்னது அம்பலம் ஆகியுள்ளது.
ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய துருப்பு சீட்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications