Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனீச்சிங்களா.. பாஜக மாஸ்டர் ஸ்ட்ரோக்! வசுந்தராவை முதல்வராக்காமலே.. அவரையும் கைக்குள் வைத்த தந்திரம்

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்து இருக்கும் பாஜக முதலமைச்சராக பஜன்லால் ஷர்மாவை தேர்வு செய்து இருக்கும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜேவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்று விரிவாக பார்ப்போம்.

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் வேட்பாளர் மறைவால் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி காங்கிரஸ் வசம் இருந்த ராஜஸ்தான் அரசை பாஜக கைப்பற்றியது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான வசுந்திரா ராஜே சிந்தியா, தியா குமாரி, சதீஷ் பூனியா இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

BJP has chosen Bhajanlal Sharma Rajasthan CM What is the move of Vasundra Raje?

குறிப்பாக வசுந்திரா ராஜே தனக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என விடாபிடியாக இருந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு இடையேயான உட்கட்சிப் பூசலை அடுத்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காமல் பாஜக தேர்தலை சந்தித்தது. ராஜஸ்தானில் பிரதமர் மோடி தலைமையில் தேர்தலை சந்திக்க பாஜக முடிவு செய்தது. பாஜக ஆளும் மற்ற மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள், பிரபலங்கள் என பலரை களத்தில் இறக்கி வேலை செய்ததுது.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழு என மத்திய அமைச்சர்களையும், பாஜக மூத்த தலைவர்கள் தலைமையில் தனித்தனி குழுக்களை அக்கட்சி அமைத்தது. பெண்கள் மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் வாக்குகள் சிதறாமல் இருக்கவும் பல்வேறு வியூகங்களை அக்கட்சி வகுத்தது. அதன்படி அடிப்படையில் தனக்கு உறுதியாக பிராமண சமுதாயத்தின் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக அதே சமுதாயத்தை சேர்ந்த பாஜக எம்பி சந்திர பிரகாஷ் ஜோஷியை அம்மாநில தலைவராக தேர்வு செய்து அவர் தலைமையில் மாநில பாஜகவினர் பணியாற்றினர்.

அதன் அடிப்படையில் 7 சதவீத பிராமண மக்களின் ஆதரவை அக்கட்சி உறுதிபடுத்தியது. சுமார் 5 தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு கொண்ட சாமியார்கள், மடாதிபதிகளை வேட்பாளர்களாக நிறுத்தி ராஜஸ்தான் முழுவதும் உள்ள அவர்களின் பக்தர்களை பாஜக தன்வசம் ஈர்த்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் இருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் பல விசயங்களை கொண்டு வந்து பிரச்சாரம் செய்து வெற்றியை உறுதிபடுத்தியது.

ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் பாஜக முதலமைச்சர் யார் என்ற பூசல் மெல்ல வெடித்தது. சாமியார் பாபா பாலக்நாத்தை முதலமைச்சராக அறிவிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், அதற்கும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் முதலமைச்சரை அறிவிக்காமல் அமைதி காத்தது அக்கட்சி. இதற்கிடையே வசுந்திரா ராஜே தன்னுடைய ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து வந்தது தேசிய தலைமைக்கே தலைவலியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், பிராமண ஆதரவை இழந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த முதல்முறை எம்.எல்.ஏவான பஜன்லால் ஷர்மாவை தேர்வு செய்து இருக்கிறது. ராஜ்புட் சமுதாயத்தை சேர்ந்த தியா குமாரி, தலித் சமுதாயத்தை சேர்ந்த பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். முதல் முறை எம்.எல்.ஏவை முதலமைச்சராக்கியது பெரிய டுவிஸ்டாக பார்க்கப்படும் நிலையில் இவரை பரிந்துரைத்ததே முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜேதான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வசுந்திரா ராஜேவை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதுடன், பிராமண மக்களின் ஆதரவையும் தக்க வைத்துக்கொள்வதற்காக இத்தகைய முடிவை அக்கட்சி எடுத்துள்ளது. இதன் மூலம் வசுந்திரா ராஜே கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் ஈடுபட மாட்டார் என்று செய்திகள் உலா வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+