முசாபர்நகர் கலவரத்தை தூண்டிய பாஜக எம்.எல்.ஏக்களுக்கு நாளை பாராட்டு விழா!!
ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கலவரத்தைத் தூண்டிய புகாரில் சிறைவாசன் அனுபவித்த பாரதிய ஜனதா கட்சியின் 2 எம்.எல்.ஏக்களுக்கு நாளை பாராட்டு விழா நடத்தப்படுவது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபரகரில் இருபிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில் 49 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

இந்த மோதலின் போது கலவரத்தை தூண்டும் வகையில் செயப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏக்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது.
ஆனால் உள்ளூர் நீதிமன்றம் இருவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரு எம்.எல்.ஏக்களுக்கும் ஜாமீன் கிடைத்தது. தற்போது சிறையில் இந்த இரு எம்.எல்.ஏக்களுக்கும் பாராட்டு விழா நடத்த உத்தரப்பிரதேச மாநில பாஜக முடிவு செய்திருக்கிறது.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நாளை ஆக்ராவில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் இந்த இரு எம்.எல்.ஏக்களும் சிறப்பிக்கப்பட இருக்கின்றனர். இதற்கு மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications