மோடி முத்திரை இல்லாமல் போனால் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும்!
நரேந்திர மோடி எனும் பிராண்டட் இல்லாமல் போனால் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி எனும் பிராண்ட் இல்லாமல் போனால் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும் என்பதைத்தான் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் கருத்து கணிப்பின் விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
குஜராத் சட்டசபை தேர்தல்கள் டிசம்பர் 9,14 தேதிகளில் நடைபெற உள்ளன. டிசம்பர் 18-ந் தேதியன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.
குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்புகள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று டைம்ஸ் நவ்-விஎம்ஆர் இணைந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டன.

பாஜக முகம் மோடிதான்
இதில், பிரதமர் மோடி மண்ணின் மைந்தர் என்பதற்காகவே பாஜகவை ஆதரிப்பதாக 81% பேர் கூறியுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் மோடி மண்ணின் மைந்தர் என்பதற்காக ஆதரித்தவர்கள் 60% பேர்தான்.

குஜராத் முதல்வரா மோடி?
அதேபோல் என்னதான் பிரதமர் பதவியில் மோடி அமர்ந்திருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தின் சிறந்த முதல்வராக 67% மோடியைத்தான் கருதுகின்றனர். ஆக பிரதமர் பதவியில் மோடி இருந்த போதும் குஜராத் மக்கள் நலன் குறித்து மட்டுமே மோடி அக்கறை கொள்வதை அம்மாநில மக்கள் உணர்ந்துள்ளனர்.

மோடி இல்லையெனில்..
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசியல் பார்வையாளர்கள், பொதுவாக மாநிலங்களில் நீண்ட காலம் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால் ஆட்சிக்கு எதிராகவே மக்கல் வாக்களிப்பார்கள். ஆனால் குஜராத்தில் தொடர்ந்து பாஜக வெல்வதற்கு காரணம் நரேந்திர மோடி எனும் முத்திரைதான்.

பாஜக தோற்கும்
பிரதமர் நரேந்திர மோடி என்கிற பிராண்டட் முத்திரை இல்லாமல் இருந்தால் நிச்சயம் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும். இதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை என்றே வாதிடுகின்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications