மருத்துவமனை கேண்டீன் சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு.. அதிர்ந்த நோயாளிகள்!
புனே: மருத்துவமனை கேண்டீனில் நோயாளி சாப்பிட்ட சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவை சேந்தவர் மகேஷ் சத்புட். கர்ப்பிணியான இவரது மனைவியை கடந்த 29ஆம் தேதி அங்குள்ள ஜெகாங்கீர் மருத்துவமனையில் அனுமதித்தார். அன்றைய தினமே மகேஷின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் மேலும் சில நாட்கள் தங்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் மருத்துவமனையில் தாயும் சேயும் இருந்தனர்.

வெஜ் சூப்
நேற்று மகேஷின் மனைவிக்கு வெஜ் சூப் வாங்கித்தருமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து மருத்துவமனை கேண்டீனினல் வெஜ் சூப் வாங்கிக்கொடுத்துள்ளார் மகேஷ்.

சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு
இதனை மகேஷின் மனைவி குடித்தபோது அதில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடப்பதை வீடியோவாக எடுத்த மகேஷ் அதனை மருத்துவமனை நிர்வாகத்திடம் காண்பித்து முறையிட்டார்.

மருத்துவமனை பெயருக்கு களங்கம்
அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனைக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே சில ஊழியர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.

போராட்டம்
இருப்பினும் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து நோயாளியின் உறவினர்களிடம் விளக்கமளித்துள்ளதாக கூறியுள்ளது. தற்போது ஜெகாங்கீர் மருத்துவமனை ஊழியர்கள் 350க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications