For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!

ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் எட்டு அடி நீளமுள்ள ராஜநாகத்தை லாவகமாக பிடித்து அசத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: 8 அடி நீளமுள்ள ராஜநாகத்தை லாவகமாகப் பிடித்து அசத்தியுள்ளார் ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். எத்தனை பெரிய கூட்டத்தையும் நடுங்கச் செய்யும் வல்லமை நாகங்களுக்கு உண்டு. அதுவும் ராஜநாகம் என்றால் என்ன ஆகும் என சொல்லவே தேவையில்லை.

ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது! ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது!

பெரும்பாலான மக்கள் பாம்பை கண்டால் பயந்து நடுங்குவார்கள். ஒரு சிலர் மட்டுமே அதனை பிடிக்கும் திறமையையும், தைரியத்தையும் பெற்றிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்தான் ஒடிசா மாநிலத்தில் வாழ்ந்து வரும் சஸ்மிதி கோச்சாய்.

பாம்பு

பாம்பு

வனப்பகுதிகள் அதிகம் கொண்ட ஒடிசா மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் இந்த சஸ்மிதி கோச்சாய். -சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் சஸ்மிதியின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. தனது இரண்டு வயதான குழந்தை அந்தப் பாம்பை நோக்கி தவழ்ந்து சென்றதை பார்த்ததும் பதறிப் போன சஸ்மிதியின் கணவர், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே குதித்து விட்டார்.

முதல் அனுபவம்

முதல் அனுபவம்

ஆனால் சற்றும் பதற்றமடையாத சஸ்மிதி, அந்தப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுவிட்டார். இதுதான் பாம்பு பிடிப்பதில் அவருக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் என்கிறார்கள். அதனைத் தொடர்ந்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகே எங்கேயாவது வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக சஸ்மிதிக்கும், அவரது கணவருக்கும் தான் வனத்துறையினரும், மக்களும் தகவல் கொடுக்க ஆரம்பித்தனர்.

வீட்டு வாசலில் ராஜநாகம்

வீட்டு வாசலில் ராஜநாகம்

வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்ட தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று அந்தப் பாம்பை பிடிப்பதை வாடிக்கையாகி கொண்டனர் கணவனும், மனைவியும். இந்த சூழலில்தான் மயூர்பஞ்ச் பகுதியில் ஒரு வீட்டுக்கு வெளியே 8 அடி நீளம் கொண்ட ராஜநாகம் இருப்பதாக சஸ்மிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரும் அவரது கணவரும் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

Recommended Video

    மனிதனைப் போல கத்தும் Snake Video பின்னணி | Telangana Snake Shouting Video | Oneindia Tamil
     வைரல் புகைப்படம்

    வைரல் புகைப்படம்

    உடனடியாக செயலில் இறங்கிய சஸ்மிதி அந்த ராஜநாகத்தை மிக லாவகமாக தனது கையால் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். பிறகு அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. சஸ்மிதி ராஜநாகத்தைப் பிடித்திருக்கும் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    வாழும் உதாரணம்

    வாழும் உதாரணம்

    இதைப் பார்த்த பலரும் சஸ்மிதியின் தைரியத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். வீரத்தில் பெண்கள் ஆண்களுக்கு எப்போது சளைத்தவர்கள் அல்லர் பற்றிய புறநானூறு பாடலே சாட்சி. இப்போதும் அதுபோன்ற வீரப்பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு வாழும் உதாரணமாகி இருக்கிறார் சஸ்மிதி.

    English summary
    A woman in Odisha named Sasmite Gochchait rescued a 8 feet long king cobra which entered a residential area in Mayurbhanj area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X