திருமணம் செய்ய மறுப்பு... 7 வயது குழந்தையின் தாய் குத்திக் கொலை: டாக்சி டிரைவர் கைது
பெங்களூர்: தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை பெங்களூரின் முக்கிய சாலை ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் சுமார் 14 இடங்களில் குத்திக் கொலை செய்த டாக்சி டிரைவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் கிளப் ஒன்றில் கம்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தவர் சுனிதா என்ற 27 வயது பெண். ஏற்கனவே மணமான இவருக்கு சுமார் ஏழு வயதில் மாற்றுத் திறனாளி பெண் குழந்தை ஒன்று உள்ளது. சுனிதா கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப் படுகிறது.
இந்நிலையில் டாக்சி டிரைவரான தன்ராஜ் (45) என்பவருடன் சுனிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்ராஜும் ஏற்கனவே மணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. இதற்கிடையே தன்ராஜ் சுனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகத் தெரிகிறது.
இதனால் சமீபமாக தன்ராஜை சந்திப்பதை சுனிதா தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல், பணிக்கு சென்ற சுனிதாவை வழி மறித்து பேச முயற்சித்துள்ளார் தன்ராஜ். ஆனால், அவரை மதிக்காமல் கடந்து செல்ல முற்பட்டுள்ளார் சுனிதா. இதனால் ஆத்திரமடைந்த தன்ராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுனிதாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுனிதாவை போக்குவரத்து போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சுனிதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சுனிதாவின் மார்பு, கழுத்து, கை மற்றும் வயிற்றில் ஏராளமான கத்திக்குத்து இருந்ததாகவும், அதில் ஒன்று இதயத்தை பலமாக தாக்கியதாலேயே மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே கொலையாளியான தன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். சுனிதா தன்னை ஏமாற்றியதாலேயே தான் அவரைக் கொலை செய்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications