சமூக விரோதி என்று கூறிய ரஜினிகாந்த் மீது வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் மனு
சமூக விரோதி என்று கூறிய ரஜினி மீது வழக்குப் பதியக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
Recommended Video

டெல்லி: தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதி என்று கூறிய ரஜினிகாந்த் மீது வழக்கு பதிய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இன்னும் 60 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் சென்று பார்த்தார். இந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் குறித்து பேட்டியளித்த அவர், தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள்தான் என்றார். சமூக விரோதிகளை தமிழக போலீஸ் அடக்க வேண்டும் என்றார்.
ரஜினியின் இந்த பேச்சிற்கு தமிழகம் முழுக்க எதிர்ப்பு வந்தது. தற்போது சமூக விரோதி என்ற ரஜினிகாந்த் மீது வழக்கு பதிய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஓசூரை சேர்ந்த சிலம்பரசன் ரஜினிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என ரஜினி கூறியது மக்களை அசிங்கப்படுத்தும் செயல், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications