காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால் விவசாயம் பாதிக்கும்- சுப்ரீம்கோர்ட்டில் தமிழகம்
டெல்லி: காவிரியில் கர்நாடகா தற்போது திறந்துவிட்டுள்ள தண்ணீர் சாகுபடிக்கு போதாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரியில் கர்நாடகம் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
காவிரியிலிருந்து கர்நாடகா 50 டி.எம்.சி நீர் திறக்க நீதிமன்றம் உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் போது தமிழக கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக தரப்பு, தமிழகத்திற்கு மேலும் நீர் திறந்து விட இயலாது என கூறியது. ஏனெனில் தங்களது மாநில அணைகளில் போதிய நீர் இல்லை என வாதிட்டுள்ளது. குடிநீருக்கே தண்ணீர் இல்லாத போது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கமுடியாது எனவும் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தமிழக தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காவிரியில் கூடுதல் தண்ணீர் கிடைக்காவிட்டால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் என்றும் கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு தரும் அளவிற்கு போதிய தண்ணீர் இருப்பு உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்று வருகின்றன.
உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினைப் பொறுத்தே கர்நாடகாவில் இருந்து கூடுதல் தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications