கொலை முயற்சி, பணம் பறிப்பு: சோட்டா ராஜன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது சிபிஐ மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளியும், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவருமான சோட்டா ராஜன் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தபோது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்தியா கொண்டு வரப்பட்ட அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான சுமார் 80 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிபிஐ சோட்டா ராஜன் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.

2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிராவில் அஜய் கோசாலியா என்ற பில்டரை கொலை செய்ய சோட்டா ராஜன் இரண்டு பேரை அனுப்பி வைத்தார். அவர்கள் சுட்டதில் அஜய் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ராஜன் மீது சிபிஐ ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது.
சோட்டா ராஜனின் ஆட்கள் நிலேஷ் என்பவரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்தது குறித்தும் சிபிஐ மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னதாக எதிரணியை சேர்ந்த 2 பேரை 2010ம் ஆண்டில் ஆள் வைத்து கொலை செய்தது, 2012ம் ஆண்டு மும்பையில் ஹோட்டல் அதிபர் பி.ஆர். ஷெட்டியை கொலை செய்ய முயன்றது தொடர்பாகவும் சோட்டா ராஜன் மீது சிபிஐ 2 வழக்குகள் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications