மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: இந்தியாவின் லடாக் எல்லைக்கு அருகே இரண்டு சீன போர் விமானங்கள் வந்துவிட்டு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    India - China issue: எல்லைக்கு அருகே வந்து சென்ற சீன விமானங்கள்... என்ன நடக்கிறது?

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. எல்லையில் இரண்டு ராணுவமும் படைகளைகுவித்து வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் இரண்டு நாட்டு படைகளும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை எல்லையில் குவித்து வருகிறது.

    முக்கியமாக லடாக் அருகே இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா படைகளை குவித்து வருகிறது. இந்த பகுதியில் இருக்கும் நதி வழியாக லடாக் உள்ளே நுழைய சீனா கடுமையான முயற்சிகளை செய்து வருகிறது.

    போர் விமானம்

    போர் விமானம்

    இந்த நிலையில் சீனாவின் இரண்டு போர் விமானங்கள் இந்திய எல்லைக்கு அருகே வந்துவிட்டது சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிற்கு அருகே சீனாவின் இரண்டு போர் விமானப்படை தளங்கள் உள்ளது . லடாக்கில் இருந்து 100-150 கிமீ தூரத்தில் இரண்டு விமானப்படைகள் உள்ளது. சீனாவின் ஹோட்டன் மற்றும் கார்குன்சா பகுதியில் சீனாவின் இரண்டு போர் விமானப்படை தளங்கள் உள்ளது.

    அத்துமீறி உள்ளது

    அத்துமீறி உள்ளது

    இங்கு சீனாவின் 10-12 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விமானங்களை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் இரண்டு போர் விமானங்கள் இந்திய எல்லைக்கு அருகே வந்து சென்றுள்ளது. சீனாவின் J-11 மற்றும் J-7 போர் விமானங்கள் இந்திய எல்லைக்கு அருகே வந்து சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த விமானங்கள் உளவு பார்க்க வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    அதிர்ச்சி அளித்தது

    அதிர்ச்சி அளித்தது

    சீனாவின் இந்த செயல் எல்லையில் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் அங்கு இந்திய விமானப்படை தற்போது தயார் நிலையில் உள்ளது. சீனா விமானப்படை அத்துமீறினால் திருப்பி தாக்க தயாராக இந்திய விமானப்படை உள்ளது. ஏற்கனவே சீனா எல்லையில் இருக்கும் லடாக் பகுதியில் சீனா போர் விமானங்களை குவித்து வருகிறது. இதற்காக சீனா தனது விமான படைத்தளத்தை விரிவாக்கி உள்ளது.

    எங்கு உள்ளது

    எங்கு உள்ளது

    அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே இந்த விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி சீனாவிற்கு சொந்தமான பகுதியாகும். பாங்காங் நதிக்கு அருகில்தான் இந்த விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் கடந்த மே 5ம் தேதி சீன ஹெலிகாப்டர் லடாக் எல்லையில் அத்துமீறியது. அதன்பின் எல்லைக்கு அருகே மீண்டும் சீன விமானம் லடாக் அருகே வந்திருப்பது பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+