புதிய ஹெலிபேட்.. ராட்சச டாங்கிகள்.. வேகமாக சுற்றி வளைக்கிறது.. லடாக்கில் சீனாவின் ஷாக்கிங் வியூகம்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் இருக்கும் பாங்காங் திசா பகுதியில் சீனா வேகமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறது. அங்கு நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது.

Recommended Video

    India China Border ஆன Ladakh-க்கை சுற்றி வளைக்கிறதா China? | New Helipad

    லடாக் எல்லையில் இருக்கும் முக்கியமான கட்டுப்பாட்டு பகுதிகளையே எல்லாம் சீனா குறி வைக்க தொடங்கி உள்ளது. முதலில் பாங்காங் திசா நதி இருக்கும் பகுதியில் மட்டும் சீனா ஆக்கிரமிப்புகளை செய்தது. அதன்பின் கல்வான் பகுதியில் ஆக்கிரமிப்புகளை செய்தது.

    அதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக லடாக் உச்சியில் இருக்கும் டெப்சாங் பகுதியில் தீவிரமாக படைகளை குவித்து வருகிறது. தற்போது மீண்டும் பாங்காங் திசோ பகுதியில் சீனா படைகளை குவித்து வருகிறது.

    என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    பாங்காக் திசோ பகுதியில் பிங்கர்கள் (Finger) எனப்படும் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் இருக்கிறது. இந்த 8 கட்டுப்பாட்டு பகுதிகளில் 4 கட்டுப்பாட்டு பகுதிகள் இந்தியா வசம் இருந்தது. மீதம் இருக்கும் நான்கு கட்டுப்பாட்டு பகுதிகள் சீனாவிடம் உள்ளது. இதில் 8வது Finger பகுதியில் சீனா நிரந்தர ராணுவ தளம் ஒன்றை கூட அமைத்து உள்ளது. ஆனால் தற்போது சீனா கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் மீது பிங்கர் பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது.

     எங்கே ஆக்கிரமிப்பு

    எங்கே ஆக்கிரமிப்பு

    அதன்படி இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பிங்கர் 4ல் சீனா தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பாங்காங் திசோ நதியை மொத்தமாக ஆக்கிரமிக்கும் வகையில் சீனா இப்படி செய்கிறது. அங்கு கடந்த ஒரு மாதமாக சீனா டென்ட்களை அமைத்து வந்தது. பதுங்கு குழிகளை அமைத்து வந்தது. அதேபோல் ஆயிரக்கணக்கில் வீரர்களும் அங்கே தொடர்ந்து குவிக்கப்பட்டு வந்தனர்.

    ஹெலிபேட்

    ஹெலிபேட்

    தற்போது மொத்தமாக இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பிங்கர் 4 பகுதியை சீனா ஆக்கிரமித்து உள்ளது. அங்கே பெரிய பெரிய டாங்கிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதோடு அங்கே புதிதாக சீனா ஹெலிபேட் ஒன்றையும் அமைத்துள்ளது. அதிக அளவில் வீரர்களை களமிறக்க வசதியாக சீனா அங்கே ஹெலிபேட் அமைத்து உள்ளது. இதனால் அங்கே பதற்றம் அதிகரித்துள்ளது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த நிலையில் புதிய திருப்பமாக இந்தியாவின் கீழ் வரும் பிங்கர் பகுதி 3 மீது சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்திய வீரர்கள் எல்லோரும் பிங்கர் 2க்கு செல்ல வேண்டும். மூன்றில் இருக்க கூடாது என்று சீனா அத்துமீறி வருகிறது. மொத்தமாக பாங்காங் திசோ நதியை ஆக்கிரமிக்கும் வகையில் சீனா இப்படி செய்கிறது. சீனாவின் செயல் போருக்கான அழைப்பு போல பார்க்கப்படுகிறது.

     சுற்றி வளைக்கிறது

    சுற்றி வளைக்கிறது

    ஏற்கனவே கல்வான் பகுதியில் சீனா ஆக்கிரமிப்புகளை செய்துள்ளது. அங்கே அதிகமாக படைகளை குவித்து வருகிறது. ஆயுதங்களை இறக்கி வருகிறது. இன்னொரு பக்கம் டெப்சாங் பகுதியில் தீவிரமாக படைகளை இறக்கி வருகிறது. தற்போது பாங்காங் திசோ பகுதியில் ஆக்கிரமிப்புகளை அதிகமாக்கி உள்ளது. இதனால் லடாக்கை கொஞ்சம் கொஞ்சமாக சீனா சுற்றிவளைக்க தொடங்கி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+