ஒடிஷா சிட் பண்ட் மோசடி: 22 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிரடி சோதனை

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: சாரதா சிட் பண்ட் மோசடியைத் தொடர்ந்து ஒடிஷாவை உலுக்கி வரும் ஏடி (ஆர்தா டட்வா) சிட்பண்ட் மோசடி வழக்கில் இன்று 22 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா சிட் பண்ட் நிறுவனமானது ரூ2,500 கோடி அளவுக்கு பொதுமக்கள் பணத்தை அபகரித்தது. நாட்டை உலுக்கிய இந்த வழக்கில் பல அரசியல் பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.

Chit fund scam: CBI raids 22 places in Odisha

இதனைத் தொடர்ந்து ஒடிஷா மாநிலத்தில் ஏடி குழுமத்தின் சிட் பண்ட் மோசடியும் அம்பலத்துக்கு வந்தது. இந்த மோசடியிலும் ஒடிஷாவின் அரசியல் பிரபலங்கள், உயர் அதிகாரிகள், மும்பை பாலிவுட் நட்சத்திரங்கள் சிக்கியுள்ளனர். இதேபோல் ஒடிஷாவின் விளையாட்டுத் துறையினரும் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஒடிஷாவில் ஏடி சிட் பண்ட் மோசடி தொடர்பாக 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+