மயில்கள் புடை சூழ் கெய்ல்.. காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா??
மும்பை: ஜமைக்காவைச் சேர்ந்த மேற்கு இந்திய அணி வீரர் கிறிஸ் கெய்ல் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை. தன்னைச் சுற்றி எத்தனை சர்ச்சைகள் கூடி நின்று கும்மியடித்தாலும் சளைக்காமல் தனது வேலையில் கவனமாக இருப்பவர் இவர்.
இவர் நடந்தால் சண்டை.. நின்றால் பஞ்சாயத்து.. உட்கார்ந்தால் உலகப் போர் என்ற அளவுக்கு இவருக்கும் சர்ச்சைகளுக்கும் அவ்வளவு பொருத்தும்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடப் போன இடத்தில் டிவி செய்தியாளரிடம் கிண்டலாகப் பேசப் போக அது பெரும் சர்ச்சையாக வெடித்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இப்போது ஒரு குசும்புத்தனத்தை செய்துள்ளார் கெய்ல். காதலர் தினத்தையொட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கெய்ல்.

ஆஸ்திரேலியாவில் அபராதம்
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் தொடருக்காக ஆடப் போயிருந்த அவர் அங்கு டிவி செய்தியாளர் மெக்லாலினிடம் குடிக்கப் போகலாமா என்று கேட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்காக அவருக்கு 7500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

பெண்கள் இல்லாத உலகம் கெய்லுக்கு இல்லை
கெய்லின் உலகில் எது இருக்கிறதோ, இல்லையோ நிச்சயம் பெண்கள் இருப்பார்கள். அவர்கள் இல்லாத உலகத்தை கெய்லால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

பெண்கள் புடை சூழ
முன்பு இப்படித்தான் தனது பெண் தோழிகள், விசிறிகள் புடை சூழ செல்பி எடுத்து வெளியிட்டு அதிர வைத்தார். அதில் ஒரு பெண்ணின் மடியில் உட்கார்ந்தும் போஸ் கொடுத்து கலங்கடித்தார்.

காதலர் தின கொண்டாட்டம்
இந்த நிலையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய கெய்ல் அதுதொடர்பாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பெண்ணையும் காணவில்லை. மாறாக ஒரு சிவப்புக் கலர் கார்தான் இருக்கிறது.
|
காருடன் கொண்டாட்டம்
இதுதான் எனது காதலர் தின டேட் என்றும் ஜாலியாகப் போட்டுள்ளார் கெய்ல். ரொம்பத்தான் குசும்பு கிறிஸ் உங்களுக்கு!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications