டெல்லி விமான நிலைய சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
டெல்லி: டெல்லி விமான நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜ்சிங் என்பவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி இந்திர காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உதவி சப்-இன்ஸ்பெக்டராக ராஜ்சிங் (வயது 58) என்பவர் பணியாற்றி வந்தார்.

டெல்லி பிஜ்வாசன் பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு, நேற்று முன்தினம் இரவு சென்ற ராஜ் சிங், விமான நிலைய பாதுகாப்புக்கு செல்வதாக கூறி துப்பாக்கியை எடுத்துள்ளார். ஆனால் பாதுகாப்பு பணிக்கு செல்லாமல் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள பகுதிக்குச் சென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவருடைய உடலில், மூன்று குண்டுகள் பாய்ந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications