7 தமிழர் விடுதலை விவகாரம்: லோக்சபாவில் காங்கிரஸ்- அதிமுக மோதல்!!
டெல்லி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு லோக்சபாவில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 2-ந் தேதியன்று, குற்றவியல் சட்டம் 435-ன் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை; அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் படி மாநில அரசு 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்தது.

இதனால் 7 தமிழரையும் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் குற்றவியல் சட்டம் 435-வது பிரிவின் கீழ் கருத்தை கோருவதாகவும் நேற்று மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு கடிதத்தை அனுப்பியது.
தமிழக அரசின் இந்த முடிவை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் லோக்சபா, ராஜ்யசபாவில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை லோக்சபா கூடியதும், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த விவகாரத்தை எழுப்பினார். ஆனால் அதிமுக எம்பிக்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
உடனே குறுக்கிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கேள்வி நேரத்துக்குப் பின்னர் இந்த விவகாரம் குறித்து பேசலாம் என்றார். பின்னர் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் சுருக்கமாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் என்றார்.
அப்போது பேசிய கார்கே, ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யவே கூடாது; 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் கடிதத்தை மத்திய அரசு பரிசீலிக்கவே கூடாது; இது குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றார். பின்னர் சபை நடவடிக்கைகள் வழக்கம் போல நடைபெற்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications