மிசோரமில் பாஜகவை மட்டுமல்ல.. மாநில கட்சிகளையும் நம்பாதீங்க! சரமாரி விமர்சனங்களை அடுக்கும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

ஐய்ஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் நவம்பர் மாதம் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக பிராந்திய கட்சிகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் மிசோரம் மாநிலமும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

Congress accuses BJP of misusing regional parties for electoral gains

அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது. காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறது.

ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிடுகிறார். தனது கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சியில் அமரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தேர்தர் பிரசாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில், பாஜக அரசியல் ஆதாயங்களுக்காக பிராந்திய கட்சிகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவரிகளில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் இது குறித்து கூறுகையில், "பாஜகவின் ஜேபி நட்டாவும், நிதின் கட்கரியும் தற்போது அதன் கூட்டாளியான மிசோ தேசிய முன்னணி மீது விமர்சனங்கள் அடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இக்கட்சியின் ஊழலையும், முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருந்த பாஜக, இப்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. இது சுத்த பாசாங்குதனம்.

கடந்த ஆண்டு, மேகாலயாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​அமித் ஷா தனது கூட்டணி கட்சியான கான்ராட் சங்மாவின் அரசாங்கத்தை நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கம் என்று சரமாரியாக தாக்கி பேசியிருந்தார். அப்புறம் என்ன நடந்தது? கான்ராட் சங்மாவுக்கு இவர் ஆதரவளித்தார். இப்படித்தான் பாஜக பிராந்திய கட்சிகளை தவறாக பயன்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படுவது வடகிழக்கு மக்கள்தான். மிசோரமில் மிசோ தேசிய முன்னணிக்கோ, ஜோரம் மக்கள் இயக்கத்திற்கோ அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் பாஜகவுக்கான வாக்கு என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தனது கூட்டணி கட்சியையே மிசோரமில் பாஜக விமர்சித்து பேச காரணம் இருக்கிறது. அதாவது மணிப்பூரில் நடந்த வன்முறையை பாஜக தடுக்க தவறி விட்டது என மிசோரம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. ஏனெனில் மிசோரமின் பூர்வகுடி மக்களின் ரத்த உறவுகள்தான் மணிப்பூரில் இருக்கும் குக்கி பழங்குடி மக்கள். ஆக இந்த அதிருப்தி தனது பக்கம் திரும்பாமல் இருக்க மிசோரம் முதல்வரும் மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா, பிரதமர் மோடியுடன் சேர்ந்து பிரசாரம் மேற்கொள்ள மாட்டேன் என அறிவித்திருந்தார். எனவே பதிலுக்கு பாஜகவும் தனது விமர்சனத்தை இக்கட்சி மீது அடுக்கி வருகிறது.

இந்த தேர்தலை பொறுத்த அளவில் மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என தேர்தல் கருத்து கணிப்புகள் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+